இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் கடும் கருத்து

சர்வதேச நாணய நிதியத்தை விட இந்தியா இலங்கைக்கு அதிகம் நிதி உள்ளிட்டவைகளை வழங்கியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் தெரிவித்துள்ளார். அண்டை நாடான இலங்கைக்கு அதிகபட்ச ஆதரவை வழங்க மோடி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர், அந்நாட்டில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் நடைபெற்ற விரிவுரை ஒன்றில் கலந்து கொண்ட போது, ​​அந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இந்திய மீனவர்கள் – இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

இந்திய மீனவர்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், கலாநிதி S.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் குப்புசாமி அண்ணாமலைக்கு இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் அனுப்பி வைத்துள்ள பதில் கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக மீனவர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி பாஜக தலைவர் குப்புசாமி அண்ணாமலை அண்மையில் இந்திய வௌியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார். நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மீனவர்கள் மீது […]