இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை மாத்திரம் அதிகரிக்கப்பட்டுள்ளது
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற கோதுமை மாவின் விலையை 5 சதத்தினாலேனும் அதிகரிக்கவில்லை, என அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். மாறாக, இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை மாத்திரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கோதுமை மா உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் அடுத்த 06 மாதங்களுக்கு தேவையான கோதுமை மா கையிருப்பு காணப்படுகின்றது என்பதை நாட்டு மக்களுக்கு அறிவிக்குமாறு உள்நாட்டு கோதுமை மா உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.