இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்திய பிரதான சந்தேகநபர் சுட்டுக் கொலை

2009 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களை இலக்கு வைத்து, பாகிஸ்தானின் லாஹூரில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய குழுவின் பிரதான சந்தேகநபர் அந்நாட்டு பொலிஸாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் உள்ள தேரா ஸ்மைல் கான் நகரில், பாகிஸ்தான் பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இக்பால் அல்லது பாலி கயாரா என அழைக்கப்படும் ஒருவரே கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர் பாகிஸ்தானிலுள்ள தலிபான் அமைப்பின் துணை பிரிவுடன் தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்பால் […]