அமெரிக்காவின் ஆதரவு…
அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட் யெலன், இலங்கையின் கடனாளிகள் தமது கடனை உரிய காலத்தில் மறுசீரமைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடலில், இலங்கையின் சர்வதேச நாணய நிதியத் திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கியமை மற்றும் இலங்கையின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலின் வலுவான உள்ளுர் உரிமை தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.