இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி ஜப்பானுக்கு…
இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி ஜப்பானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் சென்றுள்ளது. டெலோன் பீரிஸ் தலைமையிலான இலங்கையின் வளர்ந்து வரும் அணி ஜப்பான் சென்றுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் போது, ஜப்பான் தேசிய கிரிக்கெட் அணிக்கு எதிரான T20 தொடரில் இலங்கை அணி இணைய உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் 5 T20 போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.