நுளம்புகள் பரவக்கூடிய பகுதிகளை தூய்மைப்படுத்துவது அவசியம்
ஜூலை மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காண முடியும் என வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். அனைத்து துறையினரும் அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியமாகும் எனவும் வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம இதனைத் தெரிவித்தார். ”டெங்கு நோய் எந்த வயதினரையும் பாதிக்கும். பதிவாகும் நோயளர்களில் 75 சதவீதமானவர்கள் 15 வயதுக்கு மேற்பட்டவர்கள். இதற்கு முன்பாக சிறு பிள்ளைகள் அதிகமாக பாதிக்கப்பட்டாலும் தற்போது இளைஞர்களே […]