உகாண்டாவில் தீவிரவாத தாக்குதல் 40 பேர் பலி
மேற்கு உகாண்டாவில் உள்ள பாடசாலை ஒன்றில் கிளர்ச்சியாளர்கள் குழு நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பாடசாலை மாணவர்கள் எனவும் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காங்கோ எல்லைக்கு அருகே உள்ள பாடசாலைக்குள் இரவு நேரத்தில் புகுந்த ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய கிளர்ச்சிக் குழு இந்தத் தாக்குதலை நடத்தியது. அந்த பாடசாலையில் சுமார் 60 மாணவர்கள் தங்கி இருந்ததாகவும், மாணவிகள் உட்பட ஒரு குழு கிளர்ச்சியாளர்களால் […]