உயிர் பயத்தில் மாணவர்கள்

ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட சாமிமலை கவரவில ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் உயிர் பயத்தில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் நிலை உருவாகியுள்ளதாக குறித்த பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதாவது பழமையான வரலாற்றை கொண்ட கவரவில ஆரம்ப பிரிவு பாடசாலை ஆரம்பத்தில் தொழிற்சாலையிலேயே கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். பின்னரான காலங்களில் பாடசாலைகளில் புது கட்டிடங்கள் அமைக்கப்பட்டாலும் இடப்பற்றாக்குறையும் வளப்பற்றாக்குறையும் காணப்படுவதால் தரம் மூன்று மற்றும் சங்கீதஇநடன வகுப்புக்கள் குறித்த பாழடைந்த தொழிற்சாலைகளிலேயே இடம்பெற்று வருவதாகவும் […]