எந்த நேரத்திலும் மாறத் தயார் – தசுன்
எந்த நேரத்திலும் தனது நிலையை மாற்றிக்கொண்டு விளையாட தயாராக இருப்பதாக இலங்கை அணித் தலைவர் தசுன் ஷனக தெரிவித்துள்ளார். உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக சிம்பாப்வே செல்வதற்கு முன்னர் கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.