எரிபொருள் விநியோகத்தில் எதிர்பாராத முடிவு

சவூதி அரேபியா மற்றும் OPEC உறுப்பு நாடுகள், எரிபொருள் உற்பத்தியை கணிசமாக குறைக்க முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, நாளொன்றுக்கு 1.16 மில்லியன் பீப்பாய்கள் உற்பத்தியை குறைக்க அந்நாடுகள் முடிவு செய்திருந்தன. அதன்படி தினசரி குறைக்கப்பட்ட எரிபொருள் உற்பத்தி திறன் 3.66 மில்லியன் பீப்பாய்கள் அல்லது உலக எரிபொருள் தேவையில் 3.7% ஆகும். அதன் காரணமாக உலக எரிபொருள் விலை அதிகரிப்பு தவிர்க்க முடியாதது என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.