ஐவரில் ஒருவரது இறுதிக்கிரியை…
யாழ். நெடுந்தீவில் வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்ட ஐவரில் ஒருவரது இறுதிக்கிரியைகள் இன்று (26) நடைபெற்றன நெடுந்தீவில் கொலை செய்யப்பட்ட ஐவரில் ஒருவரான சுப்பிரமணியம் மகாதேவாவின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெற்றன. 75 வயதான சுப்பிரமணியம் மகாதேவா ஐந்து பிள்ளைகளின் தந்தையாவார். கிளிநொச்சி – கணேசபுரத்திலுள்ள அவரது சகோதரியின் இல்லத்தில் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் திருநகர் பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். […]