ஓகஸ்ட் மாதத்திற்குள்…
நாட்டின் சந்தை இயல்பு நிலைக்கு வர இன்னும் சில மாதங்கள் ஆகும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். கடனை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று அவர் கூறுகிறார். ஓகஸ்ட் மாதத்திற்குள் பணவீக்கத்தை ஒற்றை இலக்கத்திற்குக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.