கடலில் ஹெரோயின்
தென் கடலில் பெருமளவான போதைப்பொருளை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பலுடன் 06 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அரச புலனாய்வுப் பிரிவினரும் இலங்கை கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கு கடற்படையினரால் 125 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையின் விஜயபாகு கப்பல் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட உள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.