கம்போடிய பிரதான எதிர்க் கட்சித் தலைவர் வீட்டு காவலில்
கம்போடியாவின் பிரதான எதிர்க் கட்சித் தலைவர் அந்த நாட்டு நீதிமன்றத்தால் வீட்டு காவலில் வைக்கப்பட்டுளளார். அவருக்கு எதிரான தேச துரோக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவருக்கு கம்போடிய நீதிமன்றத்தால் 27 வருடங்கள் வீட்டு காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கம்போடியாவின் ‘தேசிய மீட்புக் கட்சியின்’ தலைவரான கெம் சோகாவுக்கே இவ்வாறான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது தேர்தலில் போட்டியிடவோ அல்லது வாக்களிக்கவோ அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவரது அரசியல் கட்சியும் தடை செய்யப்பட்டுள்ளது.