கர்தினாலுக்கு அதிகாரம் இல்லை-மைத்திரி
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தனக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்கு நீதிமன்றத்திற்கோ அல்லது பிரதம நீதியரசருக்கோ அதிகாரம் உண்டு என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாறாக கர்தினாலுக்கு எநந்த வித அதிகாரமும் இல்லை என அவர் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (19) காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபட்டார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேற்படி கருத்தை கூறியுள்ளார்.