கிறிஸ்தவ மன்றத்தினர் இணைந்து அறிக்கை
மலையக மக்கள் நாட்டிற்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு இலங்கை திருச்சபை, மெதடிஸ்ட் திருச்சபை மற்றும் இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தினர் இணைந்து அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளனர். இலங்கை காலனித்துவ ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் வேளையில், மலையக மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு வகையான பாகுபாடுகளை அகற்றுமாறு இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உண்மையில் பல இன, பல மதங்களைக் கொண்ட இலங்கையின் சமமான குடிமக்களாக மலைய […]