குடிநீரைப் பெறுவதற்கு மக்கள் போராட்டம்
மனிதன் உயிர்வாழ்வதற்கு நீர் அத்தியாவசியமானது. அதேபோல சுகாதார நலனுடன்வாழ நாளாந்தம் குறிப்பிட்டளவு சுத்தமான நீரை கட்டாயம் பருகியாக வேண்டும். எனினும், நீர்வளம்மிக்க மலையகத்தில் சில தோட்டப்பகுதிகளில் குடிநீரைப் பெறுவதற்கு மக்கள் போராட வேண்டியுள்ளது. ஒரு குடம் நீரை நிரப்பிக்கொள்வதற்கு அவர்கள் படும்பாடு ‘வலி சுமந்த கதையாகும். அந்தவகையில் அக்கரப்பத்தனை பன்சல கொலனி மக்கள் ஒரு குடம் நீருக்காக 200 படிகள் ஏறி இறங்கவேண்டியுள்ளது. சிலவேளைகளில் நீர் இல்லாமல் வெறுங்கையுடன் திரும்ப வேண்டிய அவலமும் ஏற்படுகின்றது. மேற்படி கொலனியில் […]