குற்றச்சாட்டுகளை நிராகரிக்கின்றேன் – டிரம்ப்

தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் நிராகரிப்பதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். புளோரிடா மியாமி பெடரல் நீதிமன்றத்தில் அவர் இதனை தெரிவித்தாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன டிரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் போது அரச ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் சாட்சியம் வழங்கிய போதே டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.