சுகாதார வசதிகளை பெற்றுக் கொடுப்பது எமது முதன்மை நோக்கம்
அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் வழிகாட்டலின் ஊடாக பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியம் மற்றும் நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் ஊடாக உலக வங்கியின் நிதி உதவியில் இத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சின் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் நுவரெலிய மாவட்டத்தில் 7758 பேர் உள்ளடங்கிய 2288 வீடுகளுக்கு 1021 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் இவ்வேளை திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. […]