சூடான் மோதலில் இரண்டு அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்
சூடானில் இடம்பெற்ற மோதலின் போது இரண்டு அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. நாட்டில் தங்கியுள்ள சில அமெரிக்கர்களை மீட்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் கிர்பி தெரிவித்துள்ளார். அவர்கள் தங்கள் நாட்டுக்கு செல்வதற்காக ஏற்கனவே சூடான் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சூடானுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போர்நிறுத்த காலத்தை நீடிப்பதில் அமெரிக்க அரசு தலையிடும் என்றும் கிர்பி குறிப்பிட்டுள்ளார்.