ஜப்பானில் தாக்குதல் – பொலிஸார் அறிவுறுத்தல்
ஜப்பானில் நடந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நாகானோவில் உள்ள உள்ளூர் அரசியல்வாதி ஒருவரால் கூர்மையான ஆயுதம் மற்றும் துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் இரு பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன. தாக்குதல்தாரி அடையாளத்தை மறைக்கும் வகையில் ஆடை அணிந்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும், அப்பகுதியில் உள்ள பாடசாலைகளில் படிக்கும் மாணவர்களை பாடசாலைகளிலேயே தங்க வைக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். ஜப்பானில் […]