டெங்கு அதிகரித்து வருகிறது
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 35 சிறுவர்கள் தற்போது கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பணிப்பாளர் டொக்டர் ஜி. விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார். இதனால், சரியான முறையில் கட்டுப்படுத்தப்படாவிட்டால், வரலாற்றில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவான ஆண்டாக இந்த வருடம் மாறும் அபாயம் உள்ளதாக டொக்டர் ஜி. விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார். இவ்வருடம் 43 ஆயிரத்து 346 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். சுமார் 2 வீதமான குடியிருப்புகள் நுளம்புகள் பெருகும் இடங்களாக இனங்காணப்பட்டுள்ளன.