திமுத்துக்கு அழைப்பு
எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பமாகவுள்ள ஒரு நாள் உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்குபற்றுவதற்காக பெயரிடப்பட்டுள்ள இலங்கை ஆரம்பக் குழாமில் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக பெயரிடப்பட்ட 30 பேர் கொண்ட ஆரம்பக் குழாமில் இடம்பெற்றிருந்த குசல் ஜனித் பெரேரா காயத்திலிருந்து முழுமையாக மீளவில்லை. எவ்வாறாயினும், ஆரம்ப அணியில் திமுத் கருணாரத்ன சேர்க்கப்பட்டாலும், அந்த அணியில் இருந்து குசல் பெரேரா முழுமையாக நீக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.