தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தில் தொழில்நுட்ப அதிகாரிகளாக பணியாற்றுவதற்கு 35 பேர் தெரிவு
தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தில் தொழில்நுட்ப அதிகாரிகளாக பணியாற்றுவதற்கு 35 பேர் தெரிவுசெய்யப்பட்டு, அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (05.06.2023) வழங்கி வைக்கப்பட்டன. இதற்கான நிகழ்வு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகன் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தில் தொழில்நுட்ப அதிகாரிகள் பதவிகளுக்கு வெற்றிடம் நிலவியது. இதனையடுத்து புதியவர்களை இணைத்துக்கொள்வதற்கு தேசிய மட்டத்தில் பரீட்சை […]