தேசிய வெசாக் வாரம்
தேசிய வெசாக் வாரம் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது. இவ்வருடம் அரச வெசாக் விழாவை புத்தளம் மாவட்டத்தில் மாதம்பே ஸ்ரீ ரத்னசிறி பிரிவேன் விகாரையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. வெசாக் வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல சமய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்