தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதின நிகழ்வு
நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம் இன்று (01) 59 ஆவது ஆண்டில் காலடி வைக்கின்றது. தொழிலாளர் தேசிய சங்கமானது 1965 ஆம் ஆண்டு மே முதலாம் திகதி மலையக தொழிற்சங்க துறவியென போற்றப்படும் வெள்ளையனால் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்றே அச்சங்கம் உருவாக்கப்பட்டது. சி.வி. வேலுபிள்ளை உட்பட பல முக்கிய பிரமுகர்கள் மேற்படி சங்கத்தில் அங்கம் வகித்தனர். தொழிலாளர் தேசிய சங்கத்துக்கு தற்போது பழனி திகாம்பரம் தலைமை […]