தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பற்றிய அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் பணிப்புறக்கணிப்பை நாளை முதல் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி நாளை காலை 8 மணி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தினால் தொழில் வல்லுநர்கள் சங்கத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.