“அஸ்வெசும” நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு ஜூலை 01 முதல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்படும் “அஸ்வெசும”(ஆறுதல்) நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு வழங்கும் பணிகள் ஜூலை 01 முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அதிகாரங்களுக்கமைய இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இடைநிலை, பாதிக்கப்படக்கூடிய, வறிய மற்றும் மிகவும் வறுமையான குடும்பங்களுக்கு 04 பிரிவுகளின் கீழ் கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளதோடு, அங்கவீனமானவர்கள், முதியவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளர்கள் ஆகியோருக்கும் “அஸ்வெசும” திட்டத்தின் […]