நிலநடுக்கம்
துருக்கியின் தென் பிராந்தியத்தில் நேற்று(20), 6.4 மெக்னிடியூட் அளவில் மற்றுமொரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. துருக்கி நேரப்படி நேற்றிரவு(20) சுமார் 8.04 அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 200 பேர் காயமடைந்துள்ளனர். ஏராளமான கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதுடன், கட்டட இடிபாடுகளுக்குள் அதிகமானவர்கள் சிக்கிக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 06ஆம் திகதி துருக்கியின் தென் கிழக்கு மற்றும் சிரியாவின் வட பகுதிகளில் 7.8 மெக்னிடியூட் அளவிலான சக்தி […]