நிவாரணத் திட்டங்களில் ஒரே வீடுகளில் வாழும் பல குடும்பங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்
அரசாங்கத்தின் அஸ்வெசும நிவாரணத் திட்டம் மற்றும் உலக உணவுத் திட்டம் முன்னெடுக்கும் நிவாரண உதவித் திட்டங்களில் பெருந்தோட்ட மலையக மக்கள் நேரடியாக உள்வாங்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே நடைபெற்ற கலந்துரையாடல் இவ்விடயம் வயுறுத்தப்பட்டது. தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் அதன் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர் வே.இராதாகிருஸ்ணன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் […]