நுவரெலியாவில் மலையக தொழிலாளர் முன்னணியின் கிளைக் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது
மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்க பிரிவான மலையக தொழிலாளர் முன்னணியின் கிளைக்காரியாலயம் நுவரெலியா நகரத்தில் உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே.ராதாகிருஷ்ணன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. நுவரெலியா நகருக்குட்பட்ட மக்கள் தங்கள் பிரச்சனைகளையும் அதேபோல தொழிற்சங்க பிரச்சனைகளையும் தீர்த்து வைக்க எவ்வித கட்சி பேதமின்றியும் இக்காரியாலயம் செயற்படுமென ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார். இக்கிளைக்காரியாலய திறப்பு விழாவில் மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன், மலையக மக்கள் முன்னணி […]