நுவரெலியா மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தோல் நோய்
வடமேல் மாகாணத்தில் கால்நடைகளுக்கு பரவி வரும் தோல் நோய், மத்திய மாகாணத்தில் உள்ள கால்நடை வைத்திய அதிகாரி பிரிவுகளில் பதிவாகியுள்ளதால், அதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கால்நடைகளை போக்குவரத்துச் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தில் இந்த கால்நடை நோய் உத்தியோகபூர்வ பிரிவுகளில் பதிவாகியுள்ளது என மத்திய மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் […]