நோட்டன்பிரிட்ஜ் பஸ் விபத்து – மூவர் பலி – 21 பேர் காயம் – ஐவர் கவலைக்கிடம்
(அந்துவன்) நல்லதண்ணியிலிருந்து கொழும்பு மஹரகம நோக்கி சிவனொளிபாதமலை யாத்ரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்ததோடு, 21 பேர் படுங்காயமடைந்ததோடு, ஐவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர். நோட்டன்பிரிட்ஜ் கினிகத்தேனை பிரதான வீதியில் நோர்டன்பிரிட்ஜ் டெப்லோ பகுதியில் நேற்று (19.02.2023) இரவு 09.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. எதிர்திசையில் இருந்து வந்த மற்றுமொரு பஸ்ஸுக்கு வழிவிட […]
நோட்டன்பிரிட்ஜ் பஸ் விபத்து – இருவர் பலி – 28 பேர் காயம்
(அந்துவன்) நோட்டன்பிரிட்ஜ் – கினிகத்தேனை தியகல பிரதான வீதியில் டெப்லோ பகுதியில் 19.02.2023 அன்று இரவு 9.30 மணியளவில் தனியார் பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 28 பேர் படுங்காயமடைந்துள்ளனர். நல்லதண்ணியிலிருந்து கினிகத்தேனை தியகல வழியாக கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது. கொழும்பு ரத்மலானை பகுதியிலிருந்து சிவனொளிபாதமலைக்கு சென்று, மீண்டும் கொழும்பு நோக்கி செல்லும் வழியிலேயே குறித்த பஸ் 19.02.2023 அன்று இரவு 9.30 மணியளவில் நோட்டன்பிரிட்ஜ் டெப்லோ எனும் பாதையை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதன்போது, பஸ்ஸில் […]