பிபோர்ஜோய் புயல்: – 2 பேர் பலி
பிபோர்ஜோய் புயல் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த புயல் இன்று இந்திய – பாகிஸ்தான் எல்லையில் கரையை கடந்துள்ளதாக இந்திய செய்திகள் கூறுகின்றன. இதனால் மேலும் 22 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பிபோர்ஜோய் புயலின் கோர தாண்டவத்தில் ஜாகவ் துறைமுக பகுதி, பவ்நகர் மாவட்டங்களில் சுமார் 940 கிராமங்களில் கடும்பாதிப்பு ஏற்பட்டது. ஜாகவ் துறைமுகத்தில் கரையை கடந்தபின்பும் பிபோர்ஜோய் புயலின் சீற்றம் தணியவில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.