பிலிப்பைன்சில் கப்பலில் தீ – 12 பயணிகள் பலி
பிலிப்பைன்ஸில் பயணிகள் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காணாமல் போயுள்ளனர். பிலிப்பைன்ஸின் தெற்கில் பசிலன் (Basilan) எனும் பகுதியில் 250 பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த கப்பலில் நள்ளிரவில் தீ பரவியுள்ளது. இதன்போது, கப்பலில் இருந்த பயணிகள் பலர் நீரில் குதித்துள்ளனர். கடலோர காவல் படையினரும் மீனவர்களும் இணைந்து அவர்களை மீட்டுள்ளனர். எனினும், 31 பேர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேரை காணவில்லை. காயமடைந்த 23 பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் […]