பெரிஸ நகரில் வெடிப்பு
பிரான்ஸ் தலைநகர் பெரிஸ நகரில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 37 பேர் காயமடைந்துள்ளனர். கட்டிடம் ஒன்றில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், வெடிவிபத்து காரணமாக கட்டிட இடிபாடுகளுக்குள் ஆட்கள் இருக்கிறார்களா? என்று அதிரடிப்படையினர் தேட ஆரம்பித்துள்ளனர். எவ்வாறாயினும், வெடிப்புக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.