லிந்துலை பேர்ஹாம் தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்கான ஆண் உயிரிழப்பு
தலவாக்கலை – லிந்துலை பேர்ஹாம் தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்கான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குளவிக்கொட்டுக்கு இலக்கான மற்றுமொருவர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். தேயிலை தோட்டத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்து கொண்டிருந்தவர்களே இன்று முற்பகல் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இதன்போது, 72 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த மற்றுமொருவர் லிந்துலை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவரின் சடலமும் லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.