உதயகுமார் அதிரடிப் பேச்சு…
உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மொட்டு கட்சியால் ஒரு வட்டாரத்தையும் வெல்ல முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவர் மயில்வாகனம் உதயகுமார் இதனை தெரிவித்துள்ளார். அதேபோல், கிழட்டு யானை ஓடி ஒழியும். தொலைபேசியின் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். திம்புள்ள பத்தனையில் நேற்று மாலை வட்டார வேட்பாளரை ஆதரித்து இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் அவர் மேற்படி கருத்துக்களை தெரிவித்துள்ளார்.