மலையகத்திற்கான சகல புகையிரத சேவைகளும் பாதிப்பு
புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் ஆரம்பித்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, நள்ளிரவு முதல் மலையகத்திற்கான சகல புகையிரத சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் புகையிரதத்தில் பயணஞ் செய்யும் மாணவர்கள், அரச ஊழியர்கள் உட்பட பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர். இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, மலையக பகுதியில் உள்ள புகையிரத நிலையங்களின் கதவுகள் யாவும் பூட்டப்பட்டு இருந்ததுடன், பயணிகள் ஓய்வு அறை, உணவகம் உட்பட அனைத்தும் பூட்டப்பட்டிருந்தன. ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான அதிகாரி ஒருவருக்கு பிரதிப் பொது முகாமையாளர் நியமனம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே, இந்த […]