மலையகத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்த கூட்டு பொறிமுறை
மலையகத்தில் உதைப்பந்தாட்டம் உள்ளிட்ட விளையாட்டுத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து கூட்டு பொறிமுறை ஒன்று உருவாக்குப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். அத்துடன், இலங்கையில் தேசிய மட்டத்தில் உள்ள விளையாட்டு வீரர்களின் ஆலோசனைகளும், ஒத்துழைப்புகளும் பெறப்படும் எனவும் தெரிவித்தார். அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும், அட்டன் பகுதிகளில் உள்ள உதைப்பந்தாட்ட கழகத்தின் தலைவர்களும், செயலாளர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று கொட்டகலையில் நடைபெற்றது. […]