மலையக மக்களின் இன்னல்கள் அகலட்டும் – VS
புத்தாண்டில் மலையக மக்களின் இன்னல்கள் அகலட்டும் என பிரார்த்திப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடி என்ற சுமை அகன்று யாவரும் நலம் பெற்று நாட்டை மீட்டு முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முனைப்போடு செயல்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். முக்கியமாக மலையக மக்களின் வாழ்விலும் நெருக்கடியான சூழ்நிலைகள் விலகி அவர்களின் எதிர்பார்ப்புகள் ஈடேற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.