மலையக ரயில் சேவை வழமைக்கு
கண்டியிலிருந்து பதுளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சரக்கு ரயில் எண்ணெய்க் கொள்கலனொன்று ஒன்று 23.06.2023 காலை தடம் புரண்டதால் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தது. எனினும், 23.06.2023 அன்று மதியம் 2 மணியளவில் ரயில் பாதையை சீர் செய்துள்ளதோடு, மலையக புகையிரத சேவை வழமைக்கு மாறியுள்ளதாக நானுஓயா ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. தலவாக்கலை மற்றும் வட்டகொட ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் 118 ¼ மைல் பகுதியிலேயே இவ்வாறு தடம் புரண்டிருந்தமை குறிப்பிடதக்கது. (க.கிஷாந்தன்)