விரைவில் மேலும் 06 முதலீட்டு வலயங்கள்?
06 புதிய முதலீட்டு வலயங்களை நிர்மாணிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் திட்ட வலயங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். விவசாய ஏற்றுமதியை முதன்மையாகக் கொண்டு திட்ட. வலயங்கள் ஸ்தாபிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.