ஷிவேலுச் எரிமலை வெடித்தது, 60 ஆண்டுகளில் இல்லாத அளவில் சாம்பல்

ரஷ்யாவின் கம்சாட்கா (Kamchatka) தீபகற்பத்தில் உள்ள ஷிவேலுச்  (Shiveluch) எரிமலை வெடித்து சிதற ஆரம்பித்துள்ளது. சுமார் 10 கிலோ மீட்டர் உயரத்திற்கு அதன் சாம்பல் எழும்பி இருக்கிறது. மேலும், 15 கிலோ மீட்டர் உயரத்திற்கு சாம்பல் வெடிப்புகள் எந்த நேரத்திலும் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிமலை வெடிப்பு காரணமாக விமான போக்குவரத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எரிமலையை சுற்றியுள்ள பல கிராமங்களில் வீடுகளிலும் வாகனங்களிலும் சாம்பல் படர்ந்துள்ளது. 60 ஆண்டுகளில் இல்லாத அளவில் சாம்பல் படர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. […]