ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் பயிற்சி பெறும் சுமார் 92 மாணவர்களுக்கு திடீர் சுகவீனம்
பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் பயிற்சி பெறும் சுமார் 92 மாணவர்கள் திடீர் சுகவீனத்துக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர். சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அங்கு பயிற்சி பெறும் மாணவர்கள் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றவர்களில் 10 பேர் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், ஏனையோர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக் பெற்றுக் கொண்டு வெளியேறியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் ஏதேனும் […]