இதுவரை 3,700,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக இதுவரை 3,700,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 3,200,000 க்கும் அதிகமான வீட்டுத் தொகுதிகளுக்கான விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் தலைவர் பி. விஜயரத்ன குறிப்பிட்டார். பாராளுமன்றம் மற்றும் அமைச்சர்கள் சபையின் அங்கீகாரம் கிடைத்த பின்னர் ஜூன் மாத இறுதிக்குள் நலத்திட்ட உதவிகளை வழங்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.