நலன்புரி நன்மைகள் ஜூலை முதல் – ஏழ்மையில் உள்ள குடும்பத்திற்கு மாதம் 15,000 ரூபா உதவி.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் அமுல்படுத்தப்பட்டுள்ள ‘அஸ்வெசும’ நலன்புரி நன்மைகள், சமுர்த்தி மற்றும் முதியோர் உதவித்திட்டம் உட்பட தற்போது அரசாங்கத்தால் வழங்கப்படும் நலன்புரி உதவிகளை ஜூலை முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. நலன்புரி பயனாளிகள் தமது கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதில் உள்ள சிரமங்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கிக் கணக்குகள் இல்லாத பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கு ஆரம்பிக்கத் தேவையான உதவிகள் செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி […]