3 பேரை கொலை செய்த குற்றச்சாட்டில் 31 வயதுடைய நபர் சந்தேகத்தின் பேரில் கைது
ஐக்கிய இராச்சியத்தின் நொட்டிங்ஹாம் நகர மையத்தில் 3 பேரை கொலை செய்த குற்றச்சாட்டில் 31 வயதுடைய நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக BBC செய்தி தெரிவிக்கிறது. இருவரின் சடலங்கள் இல்கெஸ்டன் வீதிப் பகுதியிலும் மற்றுமொரு சடலம் மக்தலா பகுதியிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் பல வீதிகள் மூடப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நொட்ங்ஹாம்ஷயர் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.