குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம்

மலையக பெருந்தோட்ட பகுதிகளில் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் பராமரிக்கப்படும் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில்  ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது. மேற்படி இலவச உணவு திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக 15 ஆயிரம் சிறார்கள் பயன்பெறுவார்கள். அதன்பின்னர் ஏனையோரையும் உள்வாங்குவதற்கான பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு, உலக உணவுத் திட்டம் ஆகியவற்றின் பரிந்துரைகளுக்கமைய, சுகாதார மருத்துவ அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ், சுகாதார பரிசோதகர்கள் மற்றும் […]