பெருந்தோட்ட தொழிலாளர்களின் வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும்: அரவிந்தகுமார்
நாட்டின் தேசிய வருமாaaனத்தின் பங்காளிகளான பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் சமகால பொருளாதார நெருக்கடிக்கு ஈடு கொடுக்கும் வகையில் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்துக்கள் இருக்க முடியாது அதனையே நாமும் வலியுறுத்தி நிற்கிறோம். அடுத்து வரும் மேதினமானது மலையகத்தில் மாற்றங்களை ஏபடுத்தியிருக்க வேண்டும் என்று கல்வி இராஜாங்க அமைச்சரும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள மேதினச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, மலையகத்தை பூர்வீகமாகக் கொண்டுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இந்திய வம்சாவளியினராக […]